15 வயது சிறுவனுக்கு செயற்கை இருதயம்: இத்தாலி டாக்டர்கள் சாதனை
7:30 AM // 0 comments // Balapiti Aroos // Category: helth , WORLD NEWS //லண்டன், மரணம் அடைந்தவர்களின் இருதயத்தை பாதிக்கப்பட்டவர்களின் உடலில் பொருத்தி இருதய மாற்று அறுவை சிகிச்சையை டாக்டர்கள் மேற்கொண்டு வருகின்றனர். தற்போது செயற்கையான இருதயத்தை நிரந்தரமாக பொருத்தி டாக்டர் ஒருவர் சாதனை படைத்துள்ளார்.
இச்சாதனை இத்தாலியை சேர்ந்த 15 வயது சிறுவனுக்கு நிகழ்த்தப்பட்டது. இருதய நோயினால் பாதிக்கப்பட்ட அச்சிறுவன் இத்தாலி தனுநகர் ரோமின் பர்ப்பினோ லிசா என்ற இடத்தில் உள்ள குழந்தைகள் ஆஸ்பத்திரியில் அனு மதிக்கப்பட்டான். சாவின் விளிம்பில் இருந்த அவனை டாக்டர்கள் பரிசோதனை செய்தனர்.
பின்னர் அவனுக்கு செயற்கை இருதயம் பொருத்த முடிவு செய்யப்பட்டது. இதை தொடர்ந்து அவனுக்கு செயற்கையாக தயாரிக்கப்பட்ட இருதயம் பொறுத்தப்பட்டது. அதற்கான ஆபரேசனை டாக்டர் அன்டோனியா லிடோடியா தமையிலான குழுவினர் 1 மணி நேரம் நடத்தினர். இது 2.5 அங்குலம் நீளம் கொண்டது. இதை இதயத்தின் மேல்பகுதியில் உள் பெருந்தமணியுடன் பொருத்தியுள்ளனர்.
இந்த செயற்கை இருதயம் மார்பு கூடுபகுதியில் பொருத்தப்பட்டுள்ளது. ஏனெனில் இதன் மூலம்நோய் தொற்று பாதிப்பு ஏற்படும் வாய்ப்பு மிகவும் குறையும். மேலும் இந்த இதயத்தை இயக்க பேட்டரி தயாரிக்கப்பட்டுள்ளது. இது சிறுவனின் இடது புற காது பகுதியில் பொருத்தப்பட்டுள்ளது. இதை தினமும் இரவில் செல்போன் போன்று ரீசார்ச் செய்து கொள்ள வேண்டும்.
இந்த செயற்கை இருதயத்தின் மூலம் மேலும் 20 முதல் 25 ஆண்டுகள் கூடுதலாக உயிர் வாழ முடியும். தற்போது அந்த சிறுவன் மிகவும் நலமாக இருக்கிறான். அவனது பெயரை வெளியிட டாக்டர்கள் மறுத்துவிட்டனர். இது போன்ற செயற்கை இருதயத்தின் மூலம் இதய நோய் பாதித்த குழந்தைகள் மேலும் நீண்டநாட்கள் உயிர் வாழ முடியும்.
Related posts :
0 comments for this post
Leave a reply
- 2008 - 2009 SimplexDesign. Content in my blog is licensed under a Creative Commons License.
- SimplexPro template designed by Simplex Design.
- Premium Wordpress Themes | Website Templates | Blogger Template .