நபி(ஸல்)அவர்களை மதிக்கிறார்களா! அவமதிக்கிறார்களா! மிம்பர் மேடையில் அநாகரிக பயான்
2:17 AM // 0 comments // Balapiti Aroos // Category: news //வெலிகாமம் பகுதி சில பள்ளிவாசல் மிம்பர்களில் அநாகரிக பயான்களை கேட்கக்கூடியதாகவிருக்கிறது. அண்மையில் ஒரு குத்பா உரையில் நபி(ஸல்)அவர்களின் கழிவுப் பொருட்கள் பற்றியே பயான் நிகழ்த்தப்பட்டது.
நபியவர்களின் மலம், சிறுநீர், வியர்வை,உமிழ் நீர் எல்லாம் ஒரு ரஹ்மத்தாம். மலம் கஸ்தூவாசம் மிக்கதாம். உமிழ் நீரில் சகாபாக்கள் சிலர் ரொட்டியைத் தொட்டு திண்பார்களாம். உம்மு அம்மான் (ரலி அன்ஹா) பெருமானாரின் சிறுநீரை பருகினார்களாம்.
இவற்றை அந்நிய மக்களிடம் சொல்லி தக்வா பணி புரியலாமா இது நாகரிகமாகுமா? பள்ளிவாசல்களில் ஒரு நல்ல பயான் கேட்பதே கஸ்டமாக இருக்கிறது. கண்மணி கண்மணி என்று சத்தம் போடுவதோடு. சொல்லவந்த விசயத்தை குழம்பி அழுவார்கள். மிச்சம் மீதிவைக்காமல் கண்மணி கண்மணி
என்று முழங்குவார்கள்.அடுத்த கனமே தன்னை அறியாமல் வெறுமனே நபி சொன்னார்கள் என்று தொடர்வார்கள்.
உண்மையில் நபி (ஸல்)அவர்கள் மீது பிரியத்தைக் காட்டுவது இப்படியா? நபி(ஸல்)அவர்களை உண்மையாக நேசிப்பதயின்,கடுமையான சோதனைக்கு அஞ்ச வேண்டியிருக்கும் என்ற கருத்து ஹதீஸில் காணப்படுகிறது. உண்மையில் அறிவீனமான முறையில் பயான் பண்ணுவோர் நபி (ஸல்) அவர்களை மதிக்கிறார்களா! அவமதிக்கின்றார்களா! என்பதை நபி மொழியில் இருந்து கற்றுக்கொள்ளம். எதிலும் நடுநிலையை போதித்த நபி(ஸல்) அவர்கள், அளவுக்கு மீறி செயல்படுவதை விரும்பவில்லை...
_பறக்கும் தேனீ, வெலிகாமம் Related posts :
0 comments for this post
Leave a reply
- 2008 - 2009 SimplexDesign. Content in my blog is licensed under a Creative Commons License.
- SimplexPro template designed by Simplex Design.
- Premium Wordpress Themes | Website Templates | Blogger Template .