ஒசாமாவைக் காட்டிக் கொடுத்தவர்
6:11 PM // 0 comments // Balapiti Aroos // Category: WORLD NEWS //ஒசாமா பின்லேடனின் மறைவிடம் குறித்த தகவலை அமெரிக்க அதிகாரிகளுக்கு தெரிவித்தவர் அவரது நெருங்கிய நண்பரும் தலிபான் முக்கியத் தலைவருர்களில் ஒருவருமான முல்லா அப்துல் கனி பராதர் என , லண்டனில் இருந்து வெளிவரும் பத்திரிக்கையொன்று செய்தி வெளியிட்டுள்ளது. அவரின் இருப்பிடத்தை காட்டிக் கொடுத்தமைக்கு பதிலாக தலிபான்களின் தாயகமான ஆப்கானிஸ்தானை விட்டு, அமெரிக்கப் படைகள் வெளியேற வேண்டும் என்ற பராதரின் கோரிக்கையை நிறைவேற்றுவோம் என, அமெரிக்க அதிகாரிகள் உறுதியளித்துள்ளதாகவும் லண்டனில் இருந்து வெளியாகும் 'சண்டே மிரர்' பத்திரிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. ஒசாமாவின் பணியாளர் அபு அஹமட் அல் குவைடியின் தொலைபேசி அழைப்பினை ஒட்டுக் கேட்டதன் மூலமே ஒசாமாவின் இருப்பிடத்தை கண்டுபிடித்தாக அமெரிக்கா தெரிவித்து வருகின்ற போதிலும், பராதர் தான் ஒசாமாவை காட்டிக் கொடுத்துள்ளார் எனவும் அவர் பல இரகசிய தகவல்களை அமெரிக்க உளவுப் பிரிவினருக்கு தெரிவித்து வருவதாகவும் அப்பத்திரிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Related posts :
0 comments for this post
Leave a reply
- 2008 - 2009 SimplexDesign. Content in my blog is licensed under a Creative Commons License.
- SimplexPro template designed by Simplex Design.
- Premium Wordpress Themes | Website Templates | Blogger Template .