முஸ்லிம் பெண்களை செக்ஸ் வைத்துக் கொள்கின்றமைக்காக தற்காலிகமாக திருமணம்
6:44 PM // 0 comments // Balapiti Aroos // Category: news , WORLD NEWS // இந்தியாவின் ஆந்திரா மாநிலத்தில் உள்ள ஹைதராபாத் நகரத்துக்கு கல்வி கற்கின்றமைக்கு வருகின்ற சூடான், சோமாலியா போன்ற நாடுகளை சேர்ந்த மாணவர்கள் அப்பாவிப் பாமர ஏழை முஸ்லிம்பெண்களை செக்ஸ் வைத்துக் கொள்கின்றமைக்காக தற்காலிகமாக திருமணம் செய்து கொள்கின்றார்கள் என்பது அம்பலத்துக்கு வந்து உள்ளது.
திருமணம் செய்கின்றவர்களின் சக நண்பர்களும் இப்பெண்களுடன் உறவு வைத்துக் கொள்கின்றார்கள் என்பது அடுத்த அதிர்ச்சித் தகவல்.
பெண்களின் பெற்றோருக்கு வெளிநாட்டு மாணவர்கள் 50 ஆயிரம் இந்திய ரூபாய் வரை கொடுப்பார்கள். படிப்பை முடித்துக் கொண்டு நாடு திரும்புகின்ற வரை இப்பெண்களை வைத்திருப்பார்கள். பின் அம்போ.... என்று நிர்க்கதியில் விட்டு விட்டு சென்று விடுவார்கள்.
திருமணத்துக்கு முன்னராகவே வெற்றுத் தாள்களில் பெண்களிடமும், பெண் வீட்டாரிடமும் கையொப்பம் வாங்கி விடுவார்கள். இத்தாள்களை பயன்படுத்திப் பின்னர் சட்ட ரீதியாக விவாகரத்துப் பெற முடியும்.
இத்தற்காலிக திருமணங்களை ஒழுங்கு செய்கின்றமைக்கு தரகர்கள் உள்ளார்கள்.
அத்துடன் இத்திருமணங்களை நடத்திக் கொடுக்கின்றமைக்கென முஸ்லிம் காஜிகளும் இருக்கின்றார்கள்.
அண்மைய நாட்களில் குறைந்தது 06 திருமணங்கள் வரை இவ்விதம் நடந்து இருக்கின்றன.
சூடான் நாட்டைச் சேர்ந்த 25 வயது மாணவன் ஒருவர் சுமார் ஒரு வாரத்துக்கு முன்னர் 16 வயதுச் சிறுமி ஒருத்தியை திருமணம் செய்து கொண்டார்.
திருமணத்துக்கு பின்னர் இம்மாணவனின் நண்பர்களும் சிறுமியோடு மாறி மாறி உறவு வைத்துக் கொண்டனர்.
ஆனால் சிறுமி இவர்களின் பிடியில் இருந்து ஒருவாறு தப்பினார்.
ஹைதரபாத் பொலிஸ் நிலையத்தில் தஞ்சம் அடைந்தார்.
சிறுமி வழங்கிய தகவலை அடுத்து சூடான் மாணவர்கள் இருவர், தரகர்கள், காஜி என்று 06 பேர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டனர்.
ஹைதராபாத்தில் ஒரு காலத்தில் பெண்கள் சந்தைகளில் வைத்து அராபிய ஷேக்மாருக்கு விற்கப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Related posts :
0 comments for this post
Leave a reply
- 2008 - 2009 SimplexDesign. Content in my blog is licensed under a Creative Commons License.
- SimplexPro template designed by Simplex Design.
- Premium Wordpress Themes | Website Templates | Blogger Template .