உணவை உண்டபடியே கனரக வாகனத்தை ஓட்டிய சாரதி!
4:53 PM // 0 comments // Balapiti Aroos // Category: WORLD NEWS //16 September, 2010 by su
பிரித்தானியாவில் காலை உணவை உண்டபடியே போக்குவரத்து மிகுந்த சாலையில் தனது கனரக வாகனத்தை ஓட்டிய சாரதி ஒருவர் கமராவில் பதிவாகியுள்ளார். அவரைக் கண்டுபிடித்து அவருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும் என்பது உறுதியாகக் கூறப்பட்டுள்ளது. மேற்படி சாரதி கனரக வாகனத்தைத் தன்பாட்டுக்கு ஓடவிட்டுவிட்டு இரு கைகளையும் பயன்படுத்தி தனது காலை உணவை உட்கொள்ளுகிறார். பொதுவாக வாகன சாரதிகள் ஒரு பாக்கெட் பிஸ்கட் அல்லது சாக்கலேட்டை வாகனம் ஓட்டும்போது சாப்பிடுவதை நாங்கள் பொதுவாகக் காண்கிறோம். ஆனால் இரு கைகளையும் பயன்படுத்தி கோப்பையிலுள்ள உணவைச் சாப்பிடும் இச்சம்பவம் ஒரு அபாயமான சம்பவம் என்று விபத்துக்களைத் தடுப்பதற்கான ரோயல் சொசைட்டி அமைப்பின் அதிகாரி ஒருவர் கூறியுள்ளார்.
சாரதிகள் வாகனத்தில் ஏறியதும் தமது கவனம் முழுவதையும் வாகனம் ஓட்டுவதிலேயே செலுத்த வேண்டும் எனத் தெரிவித்த அவர், சாரதிகளைத் தொடர்ந்து வாகனம் ஓட்டுவதற்கு அனுமதிக்காது வெவ்வேறு நேரத்துக்கு வேறு சாரதிகள் என்ற விதத்தில் அவர்களின் பணிகளை மாற்றிக்கொடுக்க வேண்டும் என்றும் வாகன உரிமையாளர்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார். ஒரு சாரதி வாகனத்தில் அமர்ந்ததும் அவரின் கைகளில்தான் சாலைவழியே செல்பவர்களின் உயிர்களும் தங்கியுள்ளன என்பதையும் மறக்கக்கூடாது என அவர் குறிப்பிட்டார்.

Related posts :
0 comments for this post
Leave a reply
- 2008 - 2009 SimplexDesign. Content in my blog is licensed under a Creative Commons License.
- SimplexPro template designed by Simplex Design.
- Premium Wordpress Themes | Website Templates | Blogger Template .