முதன்மை பெறும் மூலிகைகள்…!
8:39 PM // 0 comments // Hussain // Category: helth //வேக வைத்த காய்கறி, பதப்படுத்தபட்ட காய்கறி என்று நாம் சாப்பிடும் உணவுபொருள் காலத்திற்கேற்ப மாறி வருகிறது. இதனால், அவற்றில் உள்ள உயிர்ச்சத்துக்கள் எனபடும் வைட்டமின்கள் அழிந்து விடுகிறது. அதனால், நமக்குத் தேவையான புரதம், மாவுச்சத்து, கொழுப்பு, வைட்டமின்கள், தாது உப்புகள் போன்றவை போதிய அளவிற்கு கிடைக்காமல் பலவகையான நோய்கள் வந்து விடுகிறது.
இதற்கு நாம் செய்ய வேண்டியது என்ன? இதற்கு தீர்வு `பயோ புட்’ எனபடும் உணவுதான். அதென்ன பயோ-புட்..? முளையிட்ட தானியங்களில் இவை பெரும்பாலும் கிடைக்கிறது. அதனால், புரதம், கொழுப்பு, வைட்டமின் அதிகம் உள்ள தானியங்களை தேர்ந்தெடுத்து அவற்றை முளை கட்ட வேண்டும். இதிலிருந்து உடல் எடை அதிகரிக்க, நீரிழிவு நோய் கட்டுபட என்று நோயின் தன்மைக்கேற்ப தேவையான சத்துக்கள் அடங்கிய உணவுவகைகளை மருத்துவ நிபுணர்கள் பட்டியலிட்டுள்ளனர்.
இந்த உணவை முறைபடி சாப்பிடுவதன் மூலம் நோயைக் கட்டுபடுத்த முடியும் என்று சொல்கிறது சித்த மருத்துவம். சித்த மருத்துவம் பல நூற்றாண்டுகளுக்கு முன்பு தோன்றியது. சிவன் பார்வதிக்கு யோகம், ஞானம், வாதம், மருத்துவம், மந்திரம், சாத்திரம், தோத்திரம் போன்றவற்றை சொல்லிக் கொடுத்தார். இவற்றை தேவி நந்திக்கும், நந்தி தன்வந்திரிக்கும், தன்வந்திரி அசுவினிக்கும், அசுவினி அகத்தியருக்கும், அகத்தியர் புலத்தியருக்கும், புலத்தியர் தேரையருக்கும், தேரையர் பல சித்தர்களுக்கும் முறையாக உபதேசித்து இறுதியாக தமிழ் மக்களிடையே வந்து சேர்ந்துள்ளது.
சித்த மருத்துவத்தின் சிறப்பை உணர வைத்தது `சித்தா-2010′ என்ற பெயரில் சென்னை அரும்பாக்கத்தில் உள்ள அரசு சித்த மருத்துவ கல்லூரியில் நடந்த கண்காட்சி. லேகியம், மூலிகை பவுடர், மருத்துவ நூல்கள், வர்மா, யோகா உள்பட எக்ஸ்டர்னல் தெரபி சம்பந்தமாக 30 அரங்குகள், 650 மூலிகைச் செடிகள் என்று பார்வையாளர்களை பிரமிக்க வைத்தது கண்காட்சி. வெண்கொடிவேலி, தொழுகணி, செம்முள்ளி, சதுரமுல்லை, பதிமுகம், பூடுநாடி, கருங்குறிஞ்சி, வாதநாராயணன், வல்லாரை, சர்பகந்தி, நாகதந்தி, அரத்தை போன்ற அரிய மூலிகைத் தாவரங்களை கண்காட்சியில் காண முடிந்தது. ஓலைபிரண்டை, தழுதாழை, ஆவிமரம், இலட்சக்கொட்டை, கீரை போன்ற தாவர இலைகளும் கண்காட்சியில் இடம் பெற்றிருந்தன.
ஆஸ்துமா போன்ற சுவாச சம்பந்தமான நோய்களை போக்கும் எருக்கம் இலை, சளியை போக்கும் நொச்சி இலை, குழந்தைகளின் அஜீரணத்தைக் குறைக்கும் வெற்றிலை போன்ற மூலிகை இலைகள், வீக்கத்தை போக்கும் அம்மான் பச்சரிசி, தோல்நோயை போக்கும் சீனம் அகத்தி போன்ற மூலிகை இலைகள் பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தன. இவ்வளவு மூலிகைத் தாவரங்களையும் எங்கிருந்து சேகரித்தீர்கள்?
“கொல்லிமலை, சதுரகிரி, கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள மருந்துவாழ் மலை, ஆந்திரா எல்லையில் உள்ள தடா அருவிபகுதிகளிலும் இந்த தாவரங்களை சேகரித்தோம். குறைந்த நாட்களில் சேகரித்தது எங்களுக்கு மிகபெரிய வெற்றியாக இருந்தது” என்று சிலாகித்தார், இறுதி ஆண்டு படித்துக் கொண்டிருக்கும் கல்லூரி மாணவர் வினோத். “இந்த மூலிகைச் செடிகளை வீட்டுத் தோட்டத்திலேயே வளர்க்கலாம். அதிக செலவு கிடையாது. இதன் மூலம் நீண்ட காலமாக இருந்து வரும் நோய்களையும் குணபடுத்தலாம்” என்றார், பேராசிரியர் டாக்டர் உஜீவனம்.
கண்காட்சியில் என்ன ஸ்பெஷல்? “எக்ஸ்டர்னல் தெரபிக்கு முக்கியத்துவம் கொடுத்து இருக்கிறோம். வாதகேசரி தைலம், பிண்டத்தைலம், விஷ முஷ்டி தைலம் போன்ற மூலிகை தைலங்களைக் கொண்டு தொக்கணம் (மசாஜ்), குரல் வளைய சிகிச்சை, ஒற்றடம் போன்ற சிகிச்சை செய்கிறோம்., வர்மபுள்ளிகளை அடிபடையாகக் கொண்டு நோயின் தன்மைக்கேற்ப சிகிச்சை செய்கிறோம். யோகா மூலமும் நோயின் தன்மைக்கேற்ப சிகிச்சை அளித்து வருகிறோம்.
ஒருவர் பிறந்த நேரம் மற்றும் நட்சத்திரங்களை சொன்னால் போதும். என்னென்ன நோய்கள் வரும்? அவர்கள் எந்த வகையான உணவை சாப்பிட வேண்டும் என்று சொல்லிவிட முடியும். இதற்கு `பஞ்சபட்சி சாஸ்திரம்’ என்று பெயர். நாடி பார்த்தும், சிறுநீரில் நல்லெண்ணை கலந்து அது பிரியும் நிலையைக் கொண்டும் ஒருவருக்கு எந்த வகையான நோய் உள்ளது என்றும் கண்டுபிடிக்க முடியும்.
வாத, பித்த, கன்மம் என்று 3 வகையான தேக நிலைகளில் எந்த வகையில் ஒருவர் இருக்கிறார் என்பதை பரிசோதித்து, அதற்கேற்ப மருந்து கொடுக்க முடியும்.” -என்றார்கள், கல்லூரி மாணவிகள். மூலிகை பேனா விபத்து மற்றும் காயம் பட்டவுடன் முதலில் ரத்தம் வெளியேறும். பின்பு மயக்கம் வரும். இதனால் உடலின் மற்ற பாகங்கள் சோர்வுறுகின்றன.
சந்தான காரணி என்ற இந்த மூலிகை பவுடரை காயம் ஏற்பட்ட இடத்தில் போட்ட ஒரு நிமிடத்திற்குள் வலி நீங்கி, ரத்தம் வருவது நின்று விடுகிறது. நீரிழிவு நோயாளிகளுக்கு மிகவும் பயன்தரக்கூடிய இந்த மருந்தை, எளிதில் எடுத்துச் செல்லும் அளவில் பேனா வடிவில் வடிவமைத்துள்ளது பார்பவர்களை `இது என்ன மூலிகை பேனாவா?’ என்று ஆச்சரியபட வைத்தது.
Related posts :
0 comments for this post
Leave a reply
- 2008 - 2009 SimplexDesign. Content in my blog is licensed under a Creative Commons License.
- SimplexPro template designed by Simplex Design.
- Premium Wordpress Themes | Website Templates | Blogger Template .