அயலவர்களால் மாஸ்டர் என அழைக்கப்பட்ட பின்லேடன்!
6:01 PM // 0 comments // Balapiti Aroos // Category: WORLD NEWS //பின்லேடன் கொல்லப்பட்டதையடுத்து அவர் வாழ்ந்த வீட்டுச் சூழலில் வசிப்பவர்களும் அந்த வீட்டோடு சம்பந்தப்பட்ட பலரும் தொடர்ந்து விசாரிக்கப்பட்டு வருகின்றனர்.
இந்த வீட்டைக் கட்டியதாகக் கூறப்படும் 38 வயதான குல் மொஹமட் என்பவர் பொலிஸாருக்கு வாக்குமூலம் அளித்துள்ளார். “வீட்டை கட்டியவர்கள் அதன் சொந்தக்காரரை மாஸ்டர் என்று தான் குறிப்பிடுவர்.
அந்த மாஸ்டர் யார் என்பது பற்றி எதுவும் எனக்குத் தெரியாது. நான் அவரைக் கண்டது கூட இல்லை.அந்த வீடு யாருக்காகக் கட்டப்படுகின்றது, அதில் யார் வாழப்போகின்றார்கள் என்பது பற்றிக் கூட எதுவும் எனக்குத் தெரியாது.
வேலை நடைபெற்ற நாட்களில் எப்போதாவது ஒருவர் அல்லது இருவர் அங்கு வந்து வேலைகளைப் பார்வையிடுவர். பணத்தைப் பற்றி எப்போதுமே அவர்கள் கவலைப்பட்டதில்லை.
இவ்வளவு உயரமான மதில்கள் ஏன் என்று நான் அவர்களைக் கேட்டேன். அது உனக்குத் தேவையில்லாத விடயம் என்று அவர்கள் பதில் அளித்தனர்” என்று அந்த நபர் வாக்குமூலம் அளித்துள்ளார்.
இந்த வீடு 38000 சதுர அடி பரப்பு கொண்டதாகும். 2006 ஜனவரி ஆறாம் திகதி முதலே பின்லேடன் இந்த வீட்டில் வசிக்க ஆரமபித்திருக்கலாம் என்று பாகிஸ்தான் உளவுத் துறையினர் குறிப்பிட்டுள்ளனர்.
தற்போது ஐந்து மனைவிகள் உள்ள பின்லேடன் தனது இரண்டு மனைவிகளுடன் இந்த வீட்டில் வாழ்ந்து வந்துள்ளார். அவரின் மூன்று பிள்ளைகளும் இந்த வீட்டில் வாழ்ந்து வந்துள்ளனர்.
இது தவிர மேலும் ஏழு பெண்களும் 20 பிள்ளைகளும் கூட இந்த வீட்டில் இருந்ததாக நம்பப்படுகின்றது.
இந்த வீட்டில் இருந்த ஒரு கடிகாரம் அதிகாலை 2.20 மணியுடன் செயல் இழந்துள்ளது.
இந்தத் தாக்குதல் அதிகாலை வேளையில் நடந்துள்ளது என்பதை இது ஊர்ஜிதம் செய்கின்றது.
இந்த வீட்டுக்கு இறைச்சி விநியோகம் செய்த நபரையும் பொலிஸார் நேற்று விசாரித்துள்ளனர்.
45 வயதான ஷம்ரஸ்கான் என்ற அந்த நபர் இந்த வீட்டுக்கு இறைச்சியை வாசலில் வைத்தே தான் வழங்கி உள்ளதாகவும், அந்த வீட்டின் கேட்டுக்குள்ளே ஒரு அடி கூட தான் எடுத்து வைத்ததில்லை என்றும் தெரிவித்துள்ளார்.
இதேவேளை வீட்டுக்கு அருகில் வசிக்கும் சிறுவன் ஒருவன் ஒசாமா பின்லேடன் தனக்கு முயல்கள் வளர்க்க கொடுத்ததாகவும் அது இப்போது குட்டிகள் போட்டுள்ளதாகவும் தெரிவித்தான்.
வீட்டுக்கு அருகில் உள்ள சாப்பாட்டுக் கடைக்காரர் ஒருவர் தன்னிடம் தாக்குதல் நடத்தும் நாளுக்கு முந்தைய இரவு ஒசாமா வசிக்கும் வீட்டிலிருந்து வந்த ஒருவர் நாண் ரொட்டிகளை வாங்கிச் சென்றதாகவும் அனேகமாக ஒசாமா அந்த ரொட்டிகளை தான் கடைசியாக சாப்பிட்டிருப்பார் என்று தெரிவித்துள்ளார்

Related posts :
0 comments for this post
Leave a reply
- 2008 - 2009 SimplexDesign. Content in my blog is licensed under a Creative Commons License.
- SimplexPro template designed by Simplex Design.
- Premium Wordpress Themes | Website Templates | Blogger Template .