இலங்கைப் பணிப்பெண்கள்!
5:35 AM // 0 comments // Balapiti Aroos // Category: WORLD NEWS //டமாமில் பணிபுரிந்த இலங்கைப் பணிப்பெண்கள் மூவர் தம்மை இந்தியர்கள் என அடையாளங்காட்டி மும்பைக்கு செல்லமுற்படுகையில் கடந்த வாரம் குடிவரவு அதிகாரசபையினால் திருப்பி அனுப்பப்பட்டுள்ளனர் என்று சவூதிஅரேபிய செய்திகள் தெரிவிக்கின்றன. இதுதொடர்பில் இலங்கைத் தூதரகம் கருத்துத் தெரிவிக்கையில், குறித்த பணிப்பெண்கள் இலங்கைக்கு திரும்புவதற்கு விரும்பாமையே இதற்குக் காரணம் என்று கூறியுள்ளனர்.
குறித்த இலங்கைப் பணிப்பெண்கள், இந்திய அதிகாரிகளினால் வழங்கப்பட்ட அவசர சான்றிதழை காண்பித்து தம்மை இந்தியர்கள் என சவூதி அரேபிய அதிகாரிகளை நம்பவைத்துள்ளனர்.
தமிழ்நாடு மற்றும் இலங்கையில் பேசப்படும் மொழியான தமிழ் மொழியை இவர்கள் பேசுவதாக தெரிவிக்கப்படுகிறது.
மங்கலேஸ்வரி, ஷிரீன் முஹம்மது நூர் மற்றும் பரீதா ராஜ் ஆகிய இந்த மூன்று பணிப்பெண்களும் தாம் டமாமில் பணிபுரிந்த வீட்டிலிருந்த தப்பியோடியபோது அவர்களது அநுசரணையாளர்களால் வழங்கப்பட்ட முறைப்பாட்டைத் தொடர்ந்து இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
தாம் தென்னிந்தியாவைச் சேர்ந்தவர்கள் என்று இவர்கள் அரசாங்க அதிகாரிகளிடம் கூறியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதனையடுத்து சவூதி அதிகாரிகள், இவர்களை இந்தியாவிற்கு அனுப்புவதற்கு தேவையான பயண ஆவணங்களை வழங்குமாறு இந்திய தூதரக அதிகாரிகளிடம் கேட்டுள்ளனர்.
குறித்த பணிப்பெண்கள் உண்மையில் இந்தியாவைச் சேர்ந்தவர்கள் அல்லர் என்று அவர்களை ஏற்றுக்கொள்ள முடியாது என மும்பை குடிவரவு அலுவலகம் தெரிவித்துள்ளது.
எனவே இவர்கள் பேசும் மொழி மற்றும் ஏனைய ஆவணங்களைக் கொண்டு இவர்கள் இந்தியாவைச் சேர்ந்தவர்களா என்பது குறித்து ஆராய்வோம் என சவூதி அரேபியா தெரிவித்துள்ளது.
அதேவேளை இவ்வாறான மோசடிகள் தொடர்பாக கண்டறிய மிகவும் ஆற்றல்வாய்ந்த நுட்பங்களை கையாளவுள்ளதாகவும் சவூதி அரேபியா மேலும் குறிப்பிட்டுள்ளது.

Related posts :
0 comments for this post
Leave a reply
- 2008 - 2009 SimplexDesign. Content in my blog is licensed under a Creative Commons License.
- SimplexPro template designed by Simplex Design.
- Premium Wordpress Themes | Website Templates | Blogger Template .